
வெஸ்ட் இன்டீஸ் அணியினர் இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகின்றனர்.
3 டி-20 போட்டி கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எளிதான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, சிறிது நேரத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது.
இலங்கை அணியின் சுழற்பந்து வீரர் தனஞ்செயா ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதற்கு அடுத்த ஓவர் வீச வந்த தனஞ்செயாவின் பந்துகளை பந்தாடினார் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் பொலார்ட்.
ஆறு பந்துகளையும் விண்ணில் பறக்க வைத்து ஆறு சிக்ஸ்ர்களை அடித்தார். இதற்கு முன் இங்கிலாந்திற்கு எதிராக இந்திய வீரர் யுவாராஜ் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்திருந்தார். அந்த சாதனையை தற்போது பொலார்ட் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
13.1 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.