
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் H. வினோத் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘ஜனநாயகன்’ ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் அல்ல என்றும், நவீன போர் (Modern Warfare) மற்றும் அதில் பயன்படுத்தப்படும் ட்ரோன்கள், ஹியூமனாய்டு ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள படம் என்றும் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பயன்படுத்தி வரும் புதிய போர் தொழில்நுட்பங்களே இப்படத்தின் கதைக்களத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், படத்தின் வெளியீட்டிற்கு முன் ஏற்பட்ட சவால்கள் குறித்தும் வினோத் மனம் திறந்தார். தணிக்கைக் குழு சான்றிதழ் தாமதமானதால் வெளியீட்டு தேதி தள்ளிப்போனதுடன், படம் இணையத்தில் கசிந்த சம்பவமும் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
அந்த நேரத்தில் நடிகர் விஜய் தனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, “கவலைப்படாதீங்க… எல்லாம் சரியாகிவிடும். இதையும் நாம் சேர்ந்து சமாளிப்போம்” என்று ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தியதாக H. வினோத் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் இந்த மனிதநேயமான அணுகுமுறை மற்றும் இயக்குநருக்கு அளித்த உறுதுணை சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. அதேசமயம், ‘ஜனநாயகன்’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.





