
சர்வைவல் பிக்சர்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைக்கும் புதிய திரைப்படமான ‘தட்டுவண்டி’ இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது. படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் திலீபன், மேரி பென்சி குளோரியா, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
2021-ஆம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற ‘பில்டர் கோல்டு’ திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர், இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் அனைத்து தொழில்நுட்பப் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘தட்டுவண்டி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் இசை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.





