Spotlightசினிமா

டாடா படத்தைக் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்

டிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ளது ‘டாடா’ திரைப்படம. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில், படத்தினை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

அழகான ரொமாண்டிக் எண்டர்டெயினர் படமான ‘டாடா’ சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கணேஷ் K பாபு எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் S. அம்பேத் குமார் தயாரித்திருக்கிறார்.

படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் திரையரங்குகளில் வெளியீட்டு தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, K பாக்யராஜ், ஐஷ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button