Spotlightசினிமா

ஆக்‌ஷன் காட்சியில் டூப் இல்லாமல் நடித்த சாக்ஷி அகர்வால்

சாக்ஷி அகர்வால் ‘நான் கடவுள் இல்லை ‘என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால் நடித்த ஒரு சண்டைக்காட்சி வடபழனியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நடந்தது. சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் வடிவமைத்து இயக்கினார்.அதில் சாக்ஷி அகர்வால் டூப் போடாமல் பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்ததைப் பார்த்து கனல் கண்ணன் பாராட்டி உள்ளார்.

இந்தப் படத்தை முழுவதுமாக படப்பிடிப்பு முடித்துவிட்டு. நான்கு சண்டைக் காட்சிகள் மட்டும் எடுக்கப்படாமல் வைத்து கடைசியாகப் படமாக்கி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் சமுத்திரகனியின் கதாபாத்திரம் ஒரு கம்பீரமான இதுவரை திரையில் பார்க்காத ஒரு கதாபாத்திரமாக இருக்கும். இன்னொரு இளம் நாயகனாக யுவன் நடிக்கிறார். ராணுவ வீரராக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இனியா தாயாகவும், பருத்திவீரன் சரவணன் கொடூரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மற்றும் டயானா ஸ்ரீ என்கிற இளம் பெண், இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் குரல் பதிவு வேலைகள் முடிந்து இறுதிக்கட்டமாகப் பின்னணி சேர்க்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படம் 2023 பிப்ரவரி மாதம் வெளியாகும்

Facebook Comments

Related Articles

Back to top button