
கதை, திரைக்கதை, வசனம் : R.K. வித்யாதரன்
இசை மற்றும் பாடல்கள் – இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ்.
எடிட்டிங் : ராகவ் அர்ஸ்
கலை : ஶ்ரீதர்
ஸ்கிரிப்ட் கன்சல்ட்ண்ட் : V. நிவேதா
விளம்பர வடிவமைப்பு : சதீஷ் J
மக்கள் தொடர்பு : புவன் செல்வராஜ்
இணை தயாரிப்பு : K. மஞ்சு
தயாரிப்பு : Quantum Film Factory R.K.வித்யாதரன்.
நடிகர்கள்:
யோகி பாபு ,பூமிகா சாவ்லா,கே எஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள் (பக்ஸ்), சாம்ஸ், மன்மதன் , நிழல்கள் ரவி, ஆர்.கே வித்யாதரன்
கதைப்படி,
ஒரு தனியார் பள்ளி, மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடிக்கிறது. முதலாம் இடத்தைப் பிடிப்பதற்காக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முயற்சித்து வருகிறார் பள்ளியின் பிரின்ஸ்பால் பக்ஸ்.
படிப்பில் பெரிதாக நாட்டம் இல்லாத மாணவ மாணவியர்களை அனைவர் மத்தியிலும் அவமானப்படுத்துவதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார் பக்ஸ்.
மாணவ மாணவியர்களுக்கு முதலாம் இடம் மட்டுமே தமக்கான அங்கீகாரம் அதை அடைய வேண்டும் என்பதற்காக MIND SET OF SUCCESS என்ற புத்தகத்தை எழுதி அதை நூலகத்தில் வைக்கிறார் பக்ஸ்.
புத்தகத்தை படிக்கும் மாணவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து விடுகின்றனர்.
இந்த வழக்கை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் கே எஸ் ரவிக்குமார். இவரது மகனும் அதே பள்ளியில் பயின்று வருகிறார்.
மரணமானது அடுத்தடுத்து நடந்து கொண்டே இருக்கிறது. அதேசமயம், அந்த பள்ளியில் இரு அமானுஷ்யங்கள் பலரையும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.
அமானுஷ்யங்களை விரட்டுவதற்காக பள்ளிக்குள் காலடி எடுத்து வைக்கிறார் ஆர்.கே வித்யாதரன்
இந்த சூழ்நிலையில், கே எஸ் ரவிக்குமாரின் மகனும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார். இந்த சமயத்தில் பள்ளியின் ஆசிரியர்களாக எண்ட்ரீ கொடுக்கின்றனர் யோகி பாபுவும் பூமிகா சாவ்லாவும்.
அதன்பிறகு பள்ளியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

முதல் பாதி முழுவதிலுமே சீனியர் நடிகர்களான யோகிபாபுவும் பூமிகா சாவ்லாவும் இல்லாதது சற்று ஏமாற்றம் தான். இரண்டாம் பாதியில் எட்டிப்பார்த்தாலும் அவர்களுக்கான காட்சிகள் என்பது சற்று குறைவாகவே உள்ளது.
பேய் வருவதை ஏதோ 5ஆம் நம்பர் பஸ் வருவது போன்று அங்கிருக்கும் மாணவ, மாணவியர்கள் பார்ப்பது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை.
நல்லதொரு ஒன்லைனை கையில் வைத்திருந்த இயக்குனர் அதை திரைக்கதைக்கானதாக மாற்றும் போது நன்கு கவனமாக கொண்டு சென்றிருந்திருக்கலாம்.
பள்ளியில் படிப்பு மட்டுமே குறிக்கோள், அதை நோக்கி தான் ஓட வேண்டும் என்று பல பள்ளிகள் மாணவ, மாணவிகளிடையே நடத்தும் ஒரு விதமான அழுத்தத்தை இப்படம் சத்தமாகவே கூறியிருக்கிறது.

மாணவ, மாணவிகளிடையே என்ன மாதிரியான திறமை இருக்கிறது என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொண்டு அவர்களை அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி செய்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதே சாலச்சிறந்தது என்பதை இயக்குனர் இப்படத்தின் மூலம் கூறியிருக்கிறார்.
திரைக்கான மொழியை இயக்குனர் சற்று நன்றாகவே கவனித்து செய்திருந்திருக்கலாம்… பின்னணி இசையில் இவ்ளோ இரைச்சல தேவையில்லாத ஒன்று.
ஆவியானது ஒவ்வொரு பெண்ணின் மீது மாறி மாறி வரும் காட்சியை தவிர்த்திருந்திருக்கலாம்..
ஒளிப்பதிவு சற்று ஆறுதல்.
ஸ்கூல் – கல்விக்கானது மட்டுமல்ல அவர்களின் திறமைக்கானது என்பதை அறிய வைத்திருக்கிறது..





