Spotlightசினிமா

வண்டலூர் புலியை தத்தெடுத்த சீமராஜா!

சென்னை: வண்டலூர் பூங்காவில் உள்ள அனு என்னும் வெள்ளைப் புலியை நம்ம சீமராஜா ’சிவகார்த்திகேயன்’ தத்தெடுத்துள்ளார். இதுதொடர்பாக, வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம் 2 முதல் 8-ம் தேதி வரை நாடு முழுவதும் வன உயிரின வார விழா கொண்டாடப்படுகிறது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை பொதுமக்கள் தத்தெடுத்து பராமரிக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பூங்காவிலுள்ள புலி மற்றும் சிங்கத்தின் உணவுக்காக நாளொன்றுக்கு ரூ.1196 செலவாகும். இதேபோல், பிற விலங்குகளுக்கும் அவற்றின் உணவுக்கேற்ப தினசரி ஆகும் செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், அனு என்ற வெள்ளைப் புலியை 6 மாதத்துக்குத் தத்தெடுத்துள்ளார்”. என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்குண்டான ஆவணத்தை சிவகார்த்திகேயன், உயிரியல் பூங்கா இயக்குநர் எஸ்.யுவராஜிடம் நேரில் வழங்கினார்

Facebook Comments

Related Articles

Back to top button