Spotlightசினிமா

”தமிழகத்தை அழிக்கும் வட மாநிலத்தவர்கள்” – இயக்குனர் யுரேகா ஆதங்கம்

இயக்குனர் யுரேகா தமிழ்நாட்டுக்கு வரும் வட மாநிலத்தவர்களால் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை வைத்து ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இவர் மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கியவர். இதில் ஜெய்வந்த் கதாநாயகனாகவும், ஐரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இதை ஒட்டி இயக்குனர் சுரேகா நேற்று அளித்த பேட்டியில் ‘2, 4 சக்கர வாகனங்கள் வாங்க, வீடு வாங்க என்று பைனான்ஸ் பண்ணும் வட மாநில கும்பலால் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை படம் பேசுகிறது. இவர்களுக்கு தமிழக அரசு கைகூலியாக இருக்கிறது. இதை எதிர்த்து எனக்கு தெரிந்த சினிமா மூலம் குரல் கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டுக்குள் நுழைகிறவர்களை முறைப்படுத்த வேண்டும். ஒரு தமிழனின் பொருளாதாரத்தை வட மாநிலத்தை சேர்ந்தவர் தீர்மானிக்கிறார். இந்த படம் இனவெறி படம் அல்ல.

இன உணர்வு படம். தமிழ் இனம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை விளக்கும் படம். தமிழனின் பொருளாதாரத்தை தமிழன் தான் தீர்மானிக்க வேண்டும். சென்சாரில் வந்தேறி என்ற வார்த்தையை எதிர்க்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழன் குறி வைத்து தாக்கப்படுகிறான். பாலஸ்தீனத்தில் நடந்தது போல தமிழ்நாட்டிற்கு வட மாநிலத்தவர்களை அனுப்பி வைத்து போர் தொடுக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டை கைப்பற்றி வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் இதற்கு துணை போகின்றன. இப்படி நம்மை சூறையாடுபவர்களை கைகூப்பி வரவேற்கும் தமிழக அரசு நம் சகோதரர்களான இலங்கை தமிழர்களை அகதி முகாமில் அடைத்து வைத்து வதைக்கிறது.

வட மாநிலத்தவர் வருகையால் தமிழ்நாட்டு கலாசாரம், உணவு பழக்க வழக்கம், மொழி அனைத்துமே மாறுகிறது. நான் பிற மொழிக்கு எதிரானவன் அல்ல. இந்த படத்திலேயே கதாநாயகியாக ராஜஸ்தானை சேர்ந்த ஐராவை அறிமுகப்படுத்துகிறேன்’ என்று கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button