Spotlightசினிமாதமிழ்நாடு

அரசியல் தலைவர்களுடன் தனுஷ் சந்திப்பு? பெண்களுக்காக ரூ.1.5 கோடி செலவு செய்ததாக தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், விரைவில் அரசியலில் களமிறங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ், தற்போது மக்கள் நலப்பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து வருவதாகவும், சில பெரிய அரசியல் கட்சிகள் அவரைத் தங்கள் கட்சியின் முக்கிய முகமாக முன்னிறுத்த விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு திரைப்படத்திற்கு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படும் தனுஷ், சினிமா வாய்ப்புகளை விட்டுவிட்டு அரசியலில் முழுமையாக ஈடுபடுவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக பேசப்படுகிறது.

குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் பயணமும், அவருக்குக் கிடைத்துள்ள வரவேற்பும் தனுஷுக்கு அரசியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அரசியலில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்க முடியும் என அவர் நம்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, தனுஷ் மக்கள் நலப்பணிகளுக்காக அதிக அளவில் செலவு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில், பெண்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளி விளக்குகளுக்காக மட்டும் சுமார் ரூ.1.5 கோடி செலவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவில் கடின உழைப்பால் தனக்கென தனி இடத்தை உருவாக்கிய தனுஷ், அரசியலிலும் அதேபோன்ற வெற்றியைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், தனுஷ் அரசியலில் நுழைவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அவர் அரசியலில் களமிறங்குவாரா அல்லது மக்கள் நலப்பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Facebook Comments

Related Articles

Back to top button