பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளியானது ‘காலா. படத்திற்கு அதிக வரவேற்பு அனைத்து தரப்பில் இருந்தும் கிடைத்தது.
இந்நிலையில், சில ஊடகங்களும், சமூக வலைதளங்களில் சிலரும் காலா சரிவை சந்தித்ததாகவும், பெரும் நஷ்டத்தை அது அடைந்ததாகவும் தகவல் பரப்பிக் கொண்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து காலா படத்தினை தயாரித்த தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் காலா படத்தின் வெற்றியை உறுதி செய்து தகவல் வெளியிட்டுள்ளது.
காலா மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதாகவும், தயாரிப்பு நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்திருப்பதாகவும் வொண்டர்பார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை எந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தங்கள் படங்கள் வெற்றியா, தோல்வியா..?? லாபம் கொடுத்ததா, இல்லையா..?? என கூற தவிக்கும் இக்காலக்கட்டத்தில் காலா படம் வெற்றி தான், லாபம் ஈட்டிக் கொடுத்த படம் தான் என வெளிப்படையாக தனுஷ் அறிவித்துள்ளார்.