Spotlightசினிமா

சர்வதேச இசைக் கூட்டணியில் ‘வாரி வாரி’ – லாரா ராஜ் உடன் இணைந்த பாடகி தீ!

சுயாதீன இசையின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் தமிழ் பாடகி தீ, அமெரிக்க பாப் இசைக் கலைஞரும் KATSEYE குழுவின் உறுப்பினருமான லாரா ராஜ் உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் புதிய ரீமிக்ஸ் வடிவத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் இசையும் சர்வதேச பாப் இசையும் இணையும் இந்த புதிய கூட்டணி, இசை ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்த ‘வாரி வாரி’ பாடல், படலாசிரியர் விவேக்கின் வரிகளில், பாடகி தீயின் குரலில் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுயாதீன தமிழ் இசைப் பாடலாக வெளியான இந்தப் பாடல் தொடர்ந்து இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது அதன் ரீமிக்ஸ் வடிவம் சர்வதேச இசைக் கூட்டணியாக உருவாகியுள்ளது.

இந்த ரீமிக்ஸ் பாடலில் பாடகி தீயுடன் லாரா ராஜ் இணைந்து பாடியுள்ளார். பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளதுடன், 808 கிருஷ்ணா இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்களான தீ மற்றும் லாரா ராஜ் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல், இரு வெவ்வேறு இசை உலகங்களை இணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. தமிழ் இசையின் தனித்துவத்தையும் சர்வதேச பாப் இசையின் அணுகுமுறையையும் ஒரே பாடலில் இணைத்திருப்பது ‘வாரி வாரி’ ரீமிக்ஸின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச இசைக் கலைஞர்களின் இந்தக் கூட்டணி, இசை மூலம் கலாச்சார பரிமாற்றத்தை முன்னெடுக்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது. குறிப்பாக, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்கள் சர்வதேச அளவில் இணைந்து பணியாற்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏற்கனவே ‘வாரி வாரி’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள ரீமிக்ஸ் பாடலும் உலகளாவிய இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் இடம்பெறும் வகையில் கவனம் பெற்று வருகிறது. தமிழ் சுயாதீன இசைக்கு சர்வதேச அளவில் புதிய வாய்ப்புகளையும், எல்லைகளைக் கடந்து இசைக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான புதிய பாதையையும் இந்தக் கூட்டணி உருவாக்கியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button