
2024 ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளித்திரையில் வெளியாகி 2025 ஆம் ஆண்டு AMAZON PRIME OTT-யிலும் வெளியாகி பல மாநில மக்களிடையே அதிகப்படியான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் ”SCENE NUMBER 62”. இப்படத்தில் நடிகர் கதிரவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தினைத் தொடர்ந்து நடிகர் கதிரவன் இளஞ்செழியனின் புதிய பெயரிடப்படாத திரைப்படத்திலும் ஒரு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தனது கடுமையான உழைப்பில் தொடர்ந்து பல படங்கள் நடித்து வரும் நிலையில், அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்புகளையும் ஏற்படுத்தியும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விருத்தாச்சலத்தில் நடைபெற்று வருகிறது.
அது முடிந்தவுடன் அறிமுக இயக்குனரான கைலாச அய்யனார் கலைமணி அவர்களின் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தொழிலாளர் தினத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கதிரவன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், இந்த திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படமாகும். தற்போது இத்திரைப்படத்தின் கதை விவாதம் மும்முரமாக நடைபெற்று வருகிறது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
எப்படியிருந்தாலும் நடிகர் கதிரவனின் அற்புதமான முயற்சிகளுக்கும் கடின உழைப்புக்கும் தமிழ்வீதி சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.





