Spotlightசினிமா

நேரடியாக கலர்ஸ் தமிழில் வெளியாகும் “காஃபி” திரைப்படம்!

பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான நடிகை இனியாவின் நடிப்பில் உருவான காஃபி திரைப்படத்தை, Viacom18 இன் தமிழ் என்டர்டெயின்மென்ட் சேனலான கலர்ஸ் தமிழ் , இந்த ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 27ஆம் தேதி மதியம் 2 மணிக்கு திரைப்படத்தின் நேரடி சாட்டிலைட் ப்ரீமியராக ஒளிபரப்பவிருக்கிறது.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை பிரதிபலித்து, ஊழல் மற்றும் மனித கடத்தலுக்கு மத்தியில் காணாமல் போன தனது சகோதரனைக் கண்டுபிடிக்க துடிக்கும் ஒரு சகோதரியின் தேடலை நேர்த்தியாக சித்தரிக்கும் இந்த அதிரடி திரில்லரைக் அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நிஜ வாழ்க்கை ஜோடியான நடிகர் ராகுல் தேவ் மற்றும் நடிகர் முகதா முதல் முறையாக தமிழ் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் ஒரு போலீஸ் ஆக ஆசைப்படுகிறார் சத்யா (நடிகை இனியா). இருப்பினும், சூழ்நிலைகள் அவளை ஒரு வாகன ஓட்டுநராக மாற்றி விடுகின்றன. இந்தத் தொழிலின் மூலம், அவள் தன் ஒரே சொந்தமான அவளுடைய சகோதரன் கார்த்திக்கிற்காக வேலை செய்கிறாள். ஒரு நாள் கார்த்திக்கிற்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. ஆனால் அவனது மகிழ்ச்சி சிறிது காலம் மட்டுமே, அவன் நினைத்தற்கு மாற்றாக மனித கடத்தல் கும்பலிடம் சிக்கி கடத்தப்படுகிறான்.

சத்யா விரைவில் தனது சகோதரனின் இருப்பிடத்தைக் கண்டறிய தனது தேடலை தொடங்குகிறாள் மற்றும் குற்றத்தின் இருண்ட உலகிற்கு செல்கிறாள். சத்யா தன் சகோதரனைக் காப்பாற்ற முடியுமா மற்றும் படத்தின் வில்லன் விக்ரமுடன் (நடிகர் ராகுல் தேவ்) சண்டையிட்டு தோற்கடிப்பாளா..என கதை மீதியை உருவாக்குகிறார்.

டைரக்ட் டெலிவிஷன் பிரீமியர் குறித்து இயக்குனர் சாய் கிருஷ்ணா கூறியதாவது, “காஃபி திரைப்படத்தின் நேரடி தொலைக்காட்சி பிரீமியர் மூலம், எனது வாழ்வின் இந்த மைல்கல் சாதனையை கலர்ஸ் தமிழ் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தன் அன்புக்குரிய சகோதரனைக் காப்பாற்ற அனைத்து முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடும் வலிமையான பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எனது முதல் படம் அமைந்திருப்பதில் நான் மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு பெண்ணின் வலிமையையும் தைரியத்தையும் மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு உத்வேகத்தை வழங்குவதே இத்திரைப்படத்தின் கதை ஆகும். பொறியியலில் இருந்து திரைப்படத் தயாரிப்பிற்குத் திரும்பிய நான், இந்தப் திரைப்படத்தின் வருகைக்கு பார்வையாளர்கள் கொடுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கலர்ஸ் தமிழ் மூலம் நேரடி தொலைக்காட்சி பிரீமியரில் ஒரு அற்புதமான வார இறுதிக்கு சீட்டின் இருக்கை நுணியில் நம் அனைவரையும் கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”.

Facebook Comments

Related Articles

Back to top button