
அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் வசந்த்ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி மற்றும் ரோகினி உள்ளிட்டோர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது “ராக்கி”.
சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. ஒளிப்பதிவு, பின்னனி இசை, வசனங்கள் என அனைத்தும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நடிப்பு பெரிதும் ஈர்க்கப்பட்டது. இப்படத்திற்கு ஸ்ரீயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.
நாளுக்கு நாள் வெளியாகும் படத்தின் ப்ரொமோ வீடியோக்கள் மற்றும் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்திருக்கிறது.
இந்த வாரம் 23 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார்.
Facebook Comments