
பிரபல நடிகரும், இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரான பிரதாப் போத்தன் இன்று அதிகாலை உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு வயது 70. தமிழ் , தெலுங்கு மொழிகளில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தவர் பிரதாப் போத்தன்.
மை டியர் மார்த்தாண்டம், வெற்றி விழா, மகுடம், மீண்டும் ஒரு காதல் கதை, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். பல படங்களில் எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையில் இவர் நடித்த பாடல் “என் இனிய பொன் நிலாவே”.. என்ற பாடல் மிகப்பெரும் ஹிட் அடித்தது.
இவரின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பெரும் இழப்பு தான். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Facebook Comments