Spotlightசினிமா

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற விவகாரம்; சிக்கும் ஐசரி கணேஷ்!

டிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இந்த தேர்தலில் பாக்யராஜ்-ஐசரி கணேஷ் கூட்டணியின் சார்பில் சுவாமி சங்கரதாஸ் அணியும், கடந்த முறை வெற்றி பெற்ற நாசர் – விஷால் கூட்டணியின் பாண்டவர் அணியும் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர்.

இவ்விரு அணிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐசரி கணேஷ் நடத்தும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் குழு குழுவாக நடிகர் சங்க உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று ஐசரி கணேஷ் அணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அனுப்பி வைத்துள்ளார்.

நடிகர் சங்க உறுப்பினர் அல்லாத அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவர்களை எப்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தலாம் என ஐசரி கணேஷ் மீது புகார் எழும்பி உள்ளது.

ஒரு கல்லூரி மாணவி நடிகர் சங்க உறுப்பினர் ஒருவருக்கு கால் செய்து ஐசரி கணேசனுக்கு ஆதரவாக சுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஓட்டுப் போடுமாறு கூற, யார் நீங்கள் என்று அந்த நடிகர் சங்க உறுப்பினர் சரமாரி கேள்வி எழுப்ப, நான் ஐசர் கணேசனின் அவர்களின் கல்லூரி மாணவி என்று கூறியுள்ள ஆடியோ இப்போது இணையத்தில் வைரலானதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆதாரத்தோடு தேர்தல் அதிகாரி, கல்வித்துறை நிர்வாகத்தில் புகார் அளிக்கப்படும் என தெரிகிறது.

இத்தனை சர்ச்சையில் ஐசரி கணேஷ் நடத்தும் கல்லூரியில் ஒரு துறை தலைவர் என குறிப்பிட்டு நடிகர் சங்க தேர்தலில் ஐசரி கணேஷ் அணிக்கு ஓட்டு போடுங்கள் என ஒரு ஆடியோ வெளியாகி பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது

இந்த ஆதாரங்கள் உண்மையாகும் பட்சத்தில் ஐசரி கணேஷ் நடத்தும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்திற்கே சிக்கலை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button