Spotlightசினிமா

திருநங்கைகளை கெளரவப்படுத்தியதற்காக இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி’க்கு முனைவர் பட்டம்…!

யக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு உருவான படம் தான் ‘தாதா 87’. இப்படத்தில் சாருஹாசன் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் திருநங்கைகளின் காதலையும், அவர்களின் வாழ்வியலையிலையும் வெளிச்சமாக காட்டினார்.

விமர்சகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது இப்படம். இந்நிலையில் உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா சார்பில் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.

திருநங்கைகளை மையப்படுத்தி படம் இயக்கியதற்காக இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது. முனைவர் பட்டம் பெற்றதற்காக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி’க்கு தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்வீதி சார்பாக இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி’க்கு வாழ்த்துகள்.

Facebook Comments

Related Articles

Back to top button