
இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) என்ற படம் உருவாகி வருகிறது.
இப்படத்தினைத் தொடர்ந்து நடிகரும் தயாரிப்பாளருமான சாருஹாசனை வைத்து ஒரு படத்தினை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்விட்டால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
அவர் தனது ட்விட்ட பக்கத்தில்,
”கமல்ஹாசனின் பெரிய ’அண்ணாத்தா’ சாருஹாசன் நடிக்கும் ”நாயக்கர் வரலாறு”
துரோகியை விட்டு தள்ளி வா
காலம் கருவருக்கும்””
#OneManCanDoAnyThing
#JaiSriRam
– என்று பதிவிட்டுள்ளார்.
இதனால், இப்படம் எதை சார்ந்து எடுக்கப்படுகிறது என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
சுமார் 30 வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நாயகன். இப்படத்தில், கமல்ஹாசனின் கதாபாத்திரத்தின் பெயர் ‘வேலு நாயக்கர்’.
வேலு நாயக்கரின் கதாபாத்திரம் மீண்டு(ம்) வருகிறதா..?? அல்லது மும்பை கலக்கிய ஒரு பிரபலத்தை மையம் கொண்ட கதையா..?? என தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.





