சினிமா

சினிமா விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் டி. ராஜேந்தர் வெற்றி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் சென்னையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் இன்று டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற்றது.

532 உறுப்பினர்களை கொண்ட இந்த சங்கத்தில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் 16 கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த பதவிகளுக்கு, டைரக்டரும் நடிகருமான டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா அவர்கள் மேற்பார்வையில் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

நடிகர்கள் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.

இதன் முடிவு இதோ….

தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செயலாளர் பதவிக்கு T.மன்னன் (239 வாக்குகள்)
பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்)
துணை தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணை செயலாளர் பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

T Rajendar defeats Arulpathi in Distributors Association election 2019

Facebook Comments

Related Articles

Back to top button