‘வெங்கட் பிரபு’ என்ற பெயர் உச்சரிக்க படும் போதே இரு சிறு புன்னகையும் உங்கள் உதட்டில் பிறக்கும்.அதற்கு காரணம் அவர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் நிச்சயமாக, வெங்கட் பிரபு டீம் போன்ற ஒரு ஜாலியான டீம் தான். அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளிவரும் முன்பே, அவருடைய இசை ஆல்பங்களைப் பெறுவதற்கு நாம் மிகவும் ஆர்வமாக உள்ளோம். முதல் முறையாக, அவரது தம்பி பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் இசை அமைப்பாளராக வெங்கட் பிரவுடன் இணைவது அதிக ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. வெங்கட் பிரபு கோலிவுட்டின் மிக அழகிய சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரை ஒரு பாடல் பாட அழைத்து வந்திருப்பதன் மூலம் அதை நிரூபிக்கிறார். இருவரும் சமீபத்தில் ‘சா சா சாரே என்ற துள்ளலான பாடலை பதிவு செய்துள்ளனர். ஸ்டுடியோவில் அவர்கள் பாடல் பாடிய அந்த ரெக்கார்டிங் வீடியோ ஏற்கனவே வைரல் ஆகியுள்ளது. இன்று (ஜூலை 2) அந்த சிங்கிள் பாடல் வெளியாவதால் இசை ரசிகர்கள்,வெங்கட் பிரபு, சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் தீவிர ரசிகர்கள் இசை கொண்டாட்டத்துக்காக காத்திருக்கிறார்கள்.
“பேச வார்த்தைகளே இல்லை. இந்த அழகான, அன்பான சகோதரர்களின் புகழ், நேரம் மற்றும் அவர்களது குரல் ஆகியவற்றை எங்களுக்கு அளித்தது எங்கள் குழுவுக்கு பார்ட்டி நேரமாக அமைந்துள்ளது. இந்த பாடலுக்கு, இந்த கூட்டணிக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு, எங்கள் வணிக கூட்டாளிகளுக்கும் பார்ட்டி டைம் தான் என பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ் மற்றும் சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களுடன் உருவாகியுள்ள இந்த படம் ஏற்கனவே இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்தத் திரைப்படத்துக்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரித்திருக்கிறார். கேங்க்ஸ்டர், நகைச்சுவை படமான இந்த பார்ட்டி, முழுக்க ஃபிஜி தீவில் படமாக்கப்பட்டுள்ளது.
Facebook Comments