
நடிப்பு: ஃபஹத் ஃபாசில், சாரா பாலேகர், மகேஷ் மஞ்ச்ரேகர், சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு, சுப்பராஜு, திவ்யா பிள்ளை, எஸ். எஸ். ஷஷாங்க்
எழுத்து & இயக்கம்: ஷஷாங்க் யேலேட்டி
வழங்குபவர்: எஸ். எஸ். ராஜமௌலி
தயாரிப்பு: ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி, எஸ். எஸ். கார்த்திகேயா
தயாரிப்பு நிறுவனங்கள்: ஆர்கா மீடியா வொர்க்ஸ், ஷோயிங் பிசினஸ்
இசை: கால பைரவா
ஒளிப்பதிவு: பிராட் பிரான்சிஸ் ACS
ஆம்புலன்ஸ் ஓட்டுவதில் திறமையானவர் சூரி (ஃபஹத் ஃபாசில்). வாழ்க்கையில் எப்படியாவது பணம் சம்பாதித்து செட்டிலாக வேண்டும் என்பதுதான் அவரது ஒரே குறிக்கோள். அதற்காக நேர்மையான வழியை விட குறுக்கு வழிகளையே அதிகம் தேர்ந்தெடுக்கிறார்.
அப்படியொரு திட்டமாக குழந்தையைக் கடத்தி, பெற்றோரிடம் பணம் பறிக்க முடிவு செய்கிறார். அந்தத் திட்டத்தில் சூரியிடம் சிக்குகிறார் சிறுமி திவ்யா (சாரா பாலேகர்). ஆனால், தான் கடத்திய சிறுமி ஏற்கனவே இறந்துபோன ஒரு ஆன்மா என்பது சூரிக்கு தெரியாது.
தான் ஒரு மெஜிஷியன் என்றும், மேஜிக் செய்து தனது அப்பா–அம்மாவை காணாமல் போக வைத்துவிட்டதாகவும் திவ்யா கூறுகிறாள். இதைக் கேட்கும் சூரி, தானும் ஒரு மெஜிஷியன் என்று கூறி, அவளது பெற்றோரை கண்டுபிடித்துத் தருவதாக நம்பிக்கை கொடுக்கிறார்.
இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால், திவ்யா சூரியின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறாள்.
ஆரம்பத்தில் திவ்யாவை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் சூரிக்கு, ஒரு கட்டத்தில் அவள் உண்மையில் ஒரு ஆவி என்பது தெரிய வருகிறது. அதன்பிறகு அவளிடமிருந்து தப்பிக்க சூரி முயற்சி செய்தாலும், திவ்யா அவரை விட்டுப் போவதாக இல்லை.
திவ்யா ஏன் சூரியின் கண்களுக்கு மட்டும் தெரிகிறாள்? அவளது பெற்றோருக்கு என்ன நடந்தது? பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட சூரியின் வாழ்க்கையில் இந்தச் சிறுமி என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறாள்? என்பதே மீதிக்கதை.
ஒரு Ghost Story-ஐ எடுத்துக்கொண்டு அதை முழுக்க Horror படமாக மாற்றாமல், Comedy, Emotion, Fantasy என பல விஷயங்களை கலந்து கொடுத்திருப்பதுதான் படத்தின் சுவாரஸ்யம்.
குறிப்பாக சூரிக்கும் திவ்யாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களும், இருவருக்கும் உருவாகும் பிணைப்பும் படத்தின் முக்கிய பலம். முதல் பாதியில் நகைச்சுவையை முன்னிறுத்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் கதைக்கான உணர்வுப்பூர்வமான காரணங்களை வெளிப்படுத்துகிறார்.
சூரி கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் தனது வழக்கமான இயல்பான நடிப்பால் படத்தைத் தாங்கிச் செல்கிறார். பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மனிதராக ஆரம்பித்து, எதிர்பாராத சூழலில் சிக்கித் தவிக்கும் இடங்களில் அவரது Body Language மற்றும் வசன உச்சரிப்பு ரசிக்க வைக்கிறது.
காமெடி காட்சிகளில் பெரிய அலட்டல் இல்லாமல் தனது Reaction மூலமே சிரிக்க வைப்பதும் ஃபஹத்தின் ப்ளஸ்.
திவ்யாவாக வரும் சாரா பாலேகர் படத்திற்கு இன்னொரு பெரிய பலம். Cute-ஆன நடிப்பு மட்டுமில்லாமல், உணர்ச்சிகரமான காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். ஃபஹத் – சாரா இடையிலான காட்சிகள் பல இடங்களில் படத்தை உயிரோட்டமாக நகர்த்துகின்றன.
மகேஷ் மஞ்ச்ரேகர், சௌரப் சச்தேவா, சுப்பராஜு, திவ்யா பிள்ளை உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கால பைரவாவின் இசையும் பின்னணி இசையும் கதையின் Fantasy மற்றும் Emotional Mood-க்கு தேவையான பலத்தை கொடுக்கிறது. பிராட் பிரான்சிஸின் ஒளிப்பதிவும் காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது.
படத்தின் அடிப்படைக் கதை மிகவும் எளிமையானது. அந்த சிறிய கதையை நீண்ட Runtime-க்கு கொண்டு சென்றிருப்பதுதான் படத்தின் முக்கியமான குறை.
சில காட்சிகளை இன்னும் Crisp-ஆக Edit செய்திருந்தால் திரைக்கதை வேகம் அதிகரித்திருக்கும். குறிப்பாக நடுப்பகுதியில் சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் அந்த குறையை ஃபஹத் ஃபாசிலின் Performance, சிறுமி திவ்யாவின் கதாபாத்திரம், நகைச்சுவை மற்றும் Emotion ஆகியவை பெருமளவில் சமாளித்து விடுகின்றன.
Don’t Trouble The Trouble – பயமுறுத்தும் பேய்ப் படமாக இல்லாமல், ஒரு ஆவியை மையமாக வைத்து நகைச்சுவை, Fantasy மற்றும் Emotion கலந்து சொல்லப்பட்ட Feel-Good Entertainer.
படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும். அதைத் தவிர்த்து பார்த்தால், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக அமைந்திருக்கிறது.
இந்த விடுமுறையில் Family Audience-க்கு ஒரு நல்ல Entertainment – “Don’t Trouble The Trouble”.





