
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வையை திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, நடிகர் நட்டி நட்ராஜ், நடிகர் ராம்கி, நடிகைகள் பூனம் பாஜ்வா, இனியா, நந்திதா ஸ்வேதா மற்றும் அஷ்மிதா சிங் ஆகியோர் இணைந்து ‘துரோகம் பழகு’ படத்தின் முதல் பார்வையை வெளியிட்டனர்.
வெளியான முதல் பார்வை போஸ்டர் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளதுடன், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
துரோகம், நம்பிக்கை, உறவுகளை மையமாகக் கொண்ட கதை
‘துரோகம் பழகு’ திரைப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் லொள்ளு சபா ஜீவா, ‘வாழை’ புகழ் ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், ஜி. எம். குமார், கஞ்சா கருப்பு, விஜய் டிவி புகழ் திவாகர், அமுதவாணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துரோகம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும், அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களையும் மையமாக வைத்து இயக்குநர் சீயோன் ராஜா இப்படத்தை உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
“சில காயங்கள் ஒருபோதும் மன்னிக்கப்படுவதில்லை…” என்ற அழுத்தமான ஒன்-லைனுடன் வெளியாகியுள்ள முதல் பார்வை, படத்தின் கதைக்களம் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரமுத்து வரிகளில் பாடல்கள்
‘துரோகம் பழகு’ படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர்களான பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், அவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கதாநாயகன் தக்க்ஷன் விஜய், தனது கதாபாத்திரத்திற்காக நடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளில் சிறப்பான பயிற்சி மேற்கொண்டுள்ளார். கதைக்கு தேவையான உணர்வுகளையும் ஆக்ஷனையும் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’, இயக்குநர் சீயோன் ராஜாவின் வித்தியாசமான கதை சொல்லும் பாணி மற்றும் தக்க்ஷன் விஜயின் நடிப்பை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும், குறிப்பாக இளைஞர்களையும் கவரும் வகையில் படம் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.




