
மஹத், மானசா, தேவிகா மற்றும் சிலர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் தொடர் தான் “எமோஜி”. இந்த தொடரை ரங்கசாமி இயக்கியிருக்கிறார். பல முக பாவனங்களை உள்ளடக்கிய எமோஜி தலைதலைப்பை இந்த தொடருக்கு இயக்குனர் எதற்காக வைத்தார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
கதைப்படி,
மஹத் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மானசாவுடன் காதல் புரிகிறார். ஒருநாள் இருவரும் தங்கள் ப்ளாஷ் பேக் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இதனால், இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகின்றனர்.
இச்சூழலில், காதல் தோல்வி கண்டு இருந்த நாயகி தேவிகாவை கண்டு திருமணம் செய்து கொள்கிறார் மஹத். 2 ஆண்டுகள் இல்லற வாழ்க்கை நடத்திய இருவரும் பிரிகிறார்கள்… எதற்காக பிரிந்தார்கள். ? இவர்கள் இணைந்தார்களா.?? இல்லையா என்பதே தொடரின் மீதிக் கதை.
நாயகன் மஹத், சிம்புவின் நண்பரோ என்பதாலோ ர்ன்னவோ அவரின் மேனரிசம் பலவற்றை மஹத் செய்ய முயற்சி செய்கிறார். இதற்கு முன் நடித்த படங்களை காட்டிலும் சற்று இந்த தொடரில் தேறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.
அழகு தேவதைகளாக காட்சியில் பரவசம் மூட்டுகின்றனர் நாயகிகளான தேவிகாவும் மான்சாவும்.
வெப் தொடர் என்பதாலோ என்னவோ ஆங்காங்கே 18+ வசனங்கள் தெறிக்கின்றன. இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையிலான வசனங்கள் வருவதால் தொடரின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு காட்சிக்கும் அதிகரிக்கிறது.
பின்னணி இசையும் ஒளிப்பதிவும் தொடருக்கு பலமாக அமைந்துள்ளது. கதையின்மீது இன்னும் சற்று கவனம் செலுத்தி திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமான தொடராக அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.