விமர்சனங்கள்

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் – விமர்சனம்

இயக்கம்: ஸ்ரீ ரங்கராஜ்

நடிகர்கள்: ஸ்ரீகாந்த், புஜிதா, டெல்லி கணேஷ், சிங்கம்புலி, நளினி, பரதன், நிமி, சச்சு, கே ஆர் விஜயா, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சுஜாதா, சாம்ஸ், வினோதினி

கதைக்குள் பயணிக்கலாம்…

வாழ்க்கையில் பெரும் கோடீஸ்வரனாக ஆக வேண்டும் என்பது ஸ்ரீகாந்தின் கனவு. அதற்காக, பெரும் பணக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் ஸ்ரீகாந்த்.

அதே கனவில் இருப்பவர் நாயகி புஜிதா. பணக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொள்வதையே தனது லட்சியமாக கொண்டிருப்பவர் புஜிதா.

ஸ்ரீகாந்தும் புஜிதாவும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ள, இருவருமே தான் ஒரு பணக்காரர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். காதலித்த சில நாட்களிலே இருவரும் யார் யார் என்பதை இருவரும் தெரிந்து கொள்ள, காதல் ப்ரேக் ஆகி விடுகிறது.

மீண்டும் இவர்களின் காதல் கைகூடியதா.? வாழ்க்கை என்றால் அது பணம் மட்டுமே என்ற எண்ணத்தில் இருக்கும் இவர்களின் மனம் மாறியதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

வழக்கம் போல் தனக்கான உடல் மொழியில் கொஞ்சும் குரலில் நடிப்பைக் கொடுத்து மிளிர்ந்திருக்கிறார் ஹீரோ ஸ்ரீகாந்த். காதல் காட்சி, சண்டைக் காட்சி என இரண்டிலுமே அசத்தியிருக்கிறார்.

நாயகி புஜிதா காட்சிகளில் அழகாக தெரிகிறார். நடிப்பிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார்.

சிங்கம்புலியின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறது.

மேலும், படத்தில் நடித்த சீனியர் நடிகர் நடிகைகளான டெல்லி கணேஷ், நளினி, பரதன், சச்சு, கே ஆர் விஜயா, ரமேஷ் கண்ணா, பருத்திவீரன் சுஜாதா, சாம்ஸ், வினோதினி உள்ளிட்டவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கிறார்கள்.

அதற்கு முன் காரையே பார்க்காதவர்கள் போல காரில் ஏறி ஆட்டம் போட்ட காட்சியும் சற்று க்ரிஞ்ச் தான்.

முறுக்கு மீசையோடு காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவரின் காமெடி சற்று சிரிக்க வைத்தது.

வாழ்க்கையை நடத்துவதற்கு பணம் தேவையே தவிர, வாழ்க்கையை பணம் என்று எண்ணி வாழ்தல் கூடாது என்ற அடிநாளத்தை கையில் எடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி, நடிகர்களிடம் இன்னும் அதிகப்படியான நடிப்பை வாங்க இயக்குனர் தவறியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் காட்சியில், சிறிய விமானத்தைக் கொண்டு நடத்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே கதையின் ஓட்டத்திற்கோ அல்லது காமெடிக்காகவோ சிறிதளவு கூட படத்தில் ஒட்டவில்லை என்பது தான் நிதர்சனம்.

விமானத்தில் சென்றவர்களை படகில் துரத்துவும் பின் பைக்கில் துரத்துவதும் பின் விமானம் வருவதற்குள் ரெளடிகள் திரும்பி வருவதுமென காட்சிகளை சிறிதளவு கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டும் படத்திற்கு கைகொடுத்திருக்கின்றன.

Facebook Comments

Related Articles

Back to top button