
அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் மதன்குமார், டான்சர் விக்னேஷ்,
ஹரீஸ்குமார், நிரஞ்சனா, ஜீ,வி அபர்ணா,சாய் தன்யா,ஹாசின்,சாருமிசா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் “என்ஜாய்”.
சென்சாரில் A தரச் சான்றிதழ் பெற்றுள்ளதால், படத்தில் அப்படி என்னதான் இருக்கும் என்று இளசுகளை ஒரு கணம் நிற்க வைத்திருக்கிறார்கள்…
சரி நம்ம கதைக்குள்ள போயிடலாம்,
கதையின் நாயகர்களாக மூவர் இருக்கின்றனர். ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள்.
அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் ஜீவி அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் நட்பாகிறார்கள்.
ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக்கரம் நீட்டுகிறார் ஹாசின்.
மதன்குமாருக்கு காதலி இருக்கிறாள். இவர்கள் காதலித்தாலும் சின்னச்சின்ன விஷயத்தைக் கூட பெரிது படுத்திப் பார்க்கிறார் காதலி.. சின்னச்சின்ன கொஞ்சல்கள் கூட இல்லா காதலை வெறுக்கிறார் மதன்குமார்.
காதலை ப்ரேக் அப் செய்கிறார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் மதன், நண்பர்களோடு சேர்ந்து கொடைக்கானல் சென்று அங்கு பெண்களுடன் உல்லாசமாக இருக்க மூவரும் திட்டம் தீட்டுகின்றனர்.
அதேபோல சுமாரான வசதிகொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம்வரும் ஹாசின் தனது பணத்தேவைக்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொண்டு அங்கு வரும் பணக்கார ஆண்களுடன் உல்லாசமாக இருந்து பணம் சம்பாதிக்கிறார்.
இதனை பார்க்கும் மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ தயாராகின்றனர் அப்படி அவர்களுக்கான முதல் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.
ஹீரோக்கள் எதிர்பார்த்தும் நடக்காமல் போகிறது. ஹீரோயின்கள் எதிர்பார்த்ததும் அங்கு கிடைக்காமல் போகிறது. இதனால் ஏமாற்றம் அடையும் இவர்கள் அனைவருக்கும் ஒரு இடத்தில் நட்பு கிடைக்கிறது.
இந்த நட்பு அடுத்தநாள் இரவிலே, ஊடலாக மாறி விடுகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தேர்வை இயக்குனர் பார்த்து பார்த்து ரசித்து ரசித்து தேர்ந்தெடுத்திருக்கிறார் போலும். காட்சிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் மிளிர்கிறார்கள்.
நிகழ்காலத்தில் இளைஞர்கள் பேசிக்கொள்ளும் சாதாரண உரையாடல்களையும் படத்தில் வைத்து நம்மை வெகுவாகவே படத்தோடு இணைய வைத்துள்ளார் இயக்குனர்.
அதிலும், மொட்டைமாடிப் பெண்ணோடு ஹீரோ மதன்குமார் ஃபேன் மாட்டும் தருணம், சப்பாத்தி செய்யும் தருணம், என அவர் வரும் காட்சிகளில் எல்லாம் திரையரங்கில் ஒரு நிசப்தம் எட்டிப் பார்க்கும்.
அதுமட்டுமல்லாமல், பல இடங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் ரசிக்கும் குதுகலப்படுத்தும் பல அம்சங்களை அம்சமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் பெருமாள் காசி.
இக்காலத்தில் பெண்கள் தவறான பாதைக்கு சென்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குனர்.
மருந்தை சிறிது தேனை தொட்டுக் கொடுப்பது போன்று, நல்ல கருத்தை சில 18+ வசனங்களோடு கொடுத்து நம்மை ரசிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர்.
தயாரிப்பு – எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன்
ஒளிப்பதிவை மிகவும் கலர் ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் KN அக்பர்.
Km ரயானின் இசையில் “உலகமே இத தான் கொண்டாடுது… ஊருக்கு பயந்தா என்ன ஆவது” என்ற பாடல் ரசனை
எடிட்டர் – மணி குமரன் நச்…
சபேஷ்- முரளியின் பின்னணி இசை கதையோடு ஓட்டம்…
இரண்டாம் பாதியை இன்னும் சற்று உயிரோட்டமாகவும், இதனால் ஏற்படும் பாதிப்பையும் தெளிவாக கொடுத்திருந்திருக்கலாம். உண்மையான காதல் நிலைக்காதா.? என்ற கேள்வியும் இங்கு எழ வைக்கிறது.
என்ஜாய் – இளசுகளுக்கு கொண்டாட்டம்…