
வி பி விஜி தயாரித்து இயக்கியுள்ள படம் தான் ‘எழுமின்’. இப்படத்தில் விவேக், தேவயானி, ப்ரேம் குமார், அழகம் பெருமாள் மற்றும் அட்டு புகழ் ‘ரிஷி’ நடித்துள்ளனர்.
இப்படம் வரும் வியாழக்கிழமை அன்று இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது. குழந்தைகளின் தற்காப்பு கலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் முதல் தற்காப்பு கலைக்கான படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இப்படத்தில், வில்லனாக அட்டு பட நாயகன் ‘ரிஷி’ நடித்துள்ளார். கதையின் ஆக்ஷன் காட்சிகள் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக ஜூனியர் நாயகர்களிடம் உண்மையாகவே அடி வாங்கியுள்ளார். ’அட்டு’ படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பெரும் புகழ் படைத்த ஒரு நாயகன் கதையின் உயிரோட்டத்திற்காக உண்மையாகவே அடி வாங்கியது அங்கிருந்த படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Facebook Comments





