நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற பின்பு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், புதிய படங்களை திருட்டுத்தனமாக படம் பிடித்த 10 தியேட்டர்களில் இனி புதுப்படம் ரிலீஸ் இல்லை என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக். 17, 18 தேதிகளில் வெளிவரும் புதிய படங்களை இந்த 10 திரையரங்களில் வெளியிட தடை விதித்துள்ளது.
பெங்களூரு சத்யம், விருத்தாச்சலம் ஜெய்சாய் கிருஷ்ணா,மங்களூரு சினிபோலிஸ் ஆகிய திரையரங்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 10 திரையரங்குகளில் இனி தயாரிப்பாளர் சங்கம் எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
Facebook Comments