
சிறு வயதில் இருந்தே தனது தந்தையின் மீது அதீத பாசம் வைத்தவராக வளர்கிறார் தன்ஷிகா. தந்தையும் தனது மகள் மீது அளவில்லா பாசம் வைத்திருக்கிறார். கல்லூரியில் பயிலும் போது வேற்று சாதியை சேர்ந்த ஒருவரை காதல் கொள்கிறார் தன்ஷிகா.
பெற்றோர்களுக்கு தெரியாமல் இருவரும், திருமணம் செய்து கொள்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாத தன்ஷிகாவின் தந்தை, காதலனை வெட்டி சாய்க்கிறார்.
மனம் உடைந்த தன்ஷிகா, தனது தந்தையை பழி வாங்க எடுக்க ஒரு முடிவு, மிகவும் அதிர்ச்சிகரமான முடிவு… இதுவே படத்தின் கதை…
தன்ஷிகா, தனது கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். மிகப்பெரிய வசனங்களை யதார்த்தமாக உள்வாங்கி, மிக கச்சிதமாக ஒரே ஷாட்டில் நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
யாரும் தொடாத, யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்புமுனையாக தனது தந்தையை பழி வாங்க எடுக்கும் முடிவு இதுவரை தமிழ் சினிமாவில் தொடாத ஒரு பதிவாக இருந்தது.
தனது கெளரவத்திற்காக ஆணவக்கொலை செய்யும் ஒவ்வொரு தந்தைக்கும் இது ஒரு சவுக்கடியாக தான் இருக்கும்.
இது ஒரு உண்மைக் கதை என்பதை அறிந்ததும் மனம் மேலும் கனக்கிறது.
சினம்: ஆணவக்கொலைக்கு சரியான சவுக்கடி…