Spotlightதமிழ்நாடு

இரண்டு குழந்தைகளை கொன்ற பெண்ணின் கணவருக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்!

சென்னை அருகேயுள்ள குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் தம்பதிக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் இருந்தனர்.

விஜய் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே அபிராமிக்கு சுந்தரம் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டது. இதனால் தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்து தப்பியோடிய அபிராமி கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அபிராமியின் கணவர் விஜய்யை தனது வீட்டிற்கு நேரில் அழைத்த நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு ஆறுதல் கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button