Spotlightசினிமா

சூர்யா அறிமுகப்படுத்திய மித்துன் மாணிக்கத்தின் ‘ஃபேமிலி பாய்’ டீசர் வெளியீடு!

நடிகர் சூர்யாவால் ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மித்துன் மாணிக்கம், இயக்கி நடித்துள்ள ‘ஃபேமிலி பாய்’ (Family Boy) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஃபேமிலி டிராமா, ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒருநாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும் படத்தின் முக்கிய கதைக்களமாக அமைந்துள்ளன. வெளியாகியுள்ள டீசரின் காட்சியமைப்பும் பின்னணி இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இப்படத்தில் மித்துன் மாணிக்கத்துடன் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, நிர்மல் JP இசையமைத்துள்ளார்.

மெக்கானிக் பிக்சர்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button