Spotlightசினிமா

’கர்ணன்’ படம் ரிலீஸ் ஆகட்டும் … அப்புறம் இருக்கு!

வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் என இரண்டு படங்களும் மிகப்பெரும் வெற்றியடைந்த பிறகு தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.

மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்திலும் நடித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தினை கொடுத்த இயக்குனரின் அடுத்த கிராமப்புற பின்னனியை கொண்டு உருவாகி வரும் ’கர்ணன்’ படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கர்ணன் படம் மட்டும் வெளியே வரட்டும் நிச்சயம் கொண்டாடுவீங்க… மாரி செல்வராஜ் மிகச் சிறந்த இயக்குனர்’ என்றும் பாராட்டியுள்ளார்.

‘கர்ணன்’ படத்திற்கு தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்ல பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button