Spotlightசினிமா

‘ஜெயிலர் 2’ காரணமாக டிசம்பருக்கு தள்ளிப்போகும் ‘இரண்டு வானம்’!

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘இரண்டு வானம்’. இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீடு டிசம்பர் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளதால், அடுத்த வாரமே ‘இரண்டு வானம்’ படத்தை வெளியிட்டால் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

இதனால் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் நோக்கில் டிசம்பர் மாதத்தைப் படக்குழு தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, டிசம்பர் 11ஆம் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், புதிய வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணியின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றுள்ளதால், ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button