Spotlightசினிமா

அச்சு அசலாக கபில் தேவ் போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்!

டராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்.

’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை
ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம்.

அந்த இந்தியா – ஜிம்பாப்வே போட்டி, மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை.

ரன்வீர் சிங்கின் ஒரு வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்திருந்தது, அது உண்மையான கபில்தேவுக்கும், திரையில் வரும் கபில்தேவுக்கும் உள்ள வித்தியாசங்கள் ஒன்றுமே தெரியாத வகையில் அமைந்திருந்தது.

1983 ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வென்று முதன்முதலாக உலக கோப்பையை வென்று சாதனைப் படைத்த தருணங்களை

ரன்வீர் சிங்க் கபில் தேவாக நடிக்க, தாஜீர் பாசின் சுனில் கவாஸ்கராக நடிக்க, ஹார்டி சாந்து மதன்லாலாக நடிக்க, சகீப் சலீம் மொஹிந்தர் அமர்நாத்தாக நடிக்க, அம்மி வீர்க் பல்வீந்தர் சிங் சாந்துவாக நடிக்க, ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்க, சிராக் படீல் சந்தீப் படீலாக நடிக்க, சாஹில் கட்டார் சையது கிர்மானியாக நடிக்க, ஆதிநாத் கோத்தரே திலீப் வெங்சர்காராக நடிக்க, தைர்யா கார்வா ரவி சாஸ்திரியாக நடிக்க, டின்கர் சர்மா கீர்த்தி ஆஸாத்தாக நடிக்க, ஜதின் சர்மா யஷ்பால் ஷர்மாவாக நடிக்க, நிஷாந்த் தஹியா ரோஜர் பின்னியாக நடிக்க, ஆர் பத்ரி சுனில் வால்சன்னாக நடிக்க, போமன் இரானி பாரூக் என்ஜினியராக நடிக்க, பங்கஜ் திரிபாதி பி ஆர் மான் சிங்காக நடிக்க, தீபிகா படுகோனே ரோமி கபில்தேவாக ஒரு பிரம்மாதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் ஒரு விளையாட்டை மையப்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் இதுவே மிகப் பிரம்மாண்டமான படைப்பாக இருக்க, இதனை வெளியிடுகிறது. கபீர் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்க, வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker