Spotlightசினிமா

நயன்தாரா முதல் வீரப்பன் வரை… இந்திய பொழுதுபோக்கை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் ZEE5 அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி உள்நாட்டு OTT தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் உள்ளடக்க (Content Slate) திட்டத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காளம் உள்ளிட்ட ஏழு மொழிகளில் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், AI அடிப்படையிலான கதைகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என விரிவான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

பொழுதுபோக்குத் துறையில் புதிய டிரெண்டுகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ZEE5, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் மொழி எல்லைகளை தாண்டி பயணிக்கும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.

இந்த புதிய முயற்சியில் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் படைப்பாளர்கள் இணைந்துள்ளனர். Jio Studios, Maddock Films, Annapurna Studios, Passion Studios, KVN Productions, Acropolis Entertainment உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் புதிய உள்ளடக்கங்களை வழங்கவுள்ளன.

தமிழ் ரசிகர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்

தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் “Koose Munisamy Veerappan”, “Thadayam” ஆகிய வெப் சீரிஸ்களின் புதிய பகுதிகள் வெளியாகவுள்ளன.

மேலும் “Ananthakaalam”, “Thee Kural” (இந்தியாவின் முதல் சுயாதீன ராப் பேட்டில் நிகழ்ச்சி) ஆகிய புதிய ஒரிஜினல்கள் அறிமுகமாகின்றன.

திரைப்பட வரிசையில் “Demonte Colony 3”, “Hi!” மற்றும் “Raawadi” ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, வங்காளம்

இந்தி பிரிவில் Coffee King, The Scam: Leaked, Rangbaaz Season 4 உள்ளிட்ட தொடர்களும், Hai Jawani Toh Ishq Hona Hai, Bandar போன்ற திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

தெலுங்கில் Shrimathi, Objection Mylord உள்ளிட்ட தொடர்களும், NBK111, Venky Anil 5 போன்ற படங்களும் வெளியாகின்றன.

மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் வங்காள மொழிகளிலும் பல புதிய ஒரிஜினல்கள் மற்றும் திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு, AI மற்றும் குழந்தைகளுக்கான உள்ளடக்கங்கள்

திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுடன் மட்டுமல்லாமல் FIFA®, Bundesliga, ILT20 Season 5, Tamil Nadu Kabaddi உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்புகளையும் ZEE5 வழங்கவுள்ளது.

AI மற்றும் அனிமேஷன் பிரிவில் Garud – Ek Yodha Ki Gatha, Vikram Betal, Shiv Sati, Aiyappan உள்ளிட்ட தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

குழந்தைகளுக்காக Smart KidZ, Tales of Krishna, Bandbudh and Budbak 2.0 போன்ற நிகழ்ச்சிகளும் அறிமுகமாகின்றன.

ZEE5 நிர்வாகம் என்ன சொல்கிறது?

ZEE5 இந்தியாவின் வணிகத் தலைவர் தேஜ்கரண் சிங் பஜாஜ், “பொழுதுபோக்குத் துறையின் மாற்றங்களை பின்பற்றுவது மட்டுமல்ல, அதை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இந்தியாவின் சிறந்த படைப்பாளர்களை ஒரே தளத்தில் இணைத்து, ஏழு மொழிகளில் மிகப்பெரிய பொழுதுபோக்கு உலகத்தை உருவாக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ZEE-யின் Chief Content Officer ராகவேந்திர ஹுன்சூர், “எண்ணிக்கையை விட தரமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். மொழி மற்றும் வடிவங்களை தாண்டி பார்வையாளர்களின் மனதைத் தொடும் கதைகளே எங்கள் இலக்கு” என கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய பல்மொழி பொழுதுபோக்கு தளமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது ZEE5.

Facebook Comments

Related Articles

Back to top button