
‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘தடுமாறுதே’ பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ‘தபாஹி’ பாடலின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான இந்த மெலடி பாடல், கதாநாயகர்களான ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரங்களின் காதல், ஏக்கம் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறது.
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து நடித்துள்ள இந்த பாடல், அவர்களது கதாபாத்திரங்களின் உறவுக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. காதலின் மென்மை, மனக்குழப்பம் மற்றும் உணர்ச்சி மிக்க தருணங்களை காட்சிப்படுத்தும் இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் பாடலுக்கு தனிஷ்க் பாக்சி, அர்ஸ்லான் நிஜாமி மற்றும் ஃபஹீம் அப்துல்லா ஆகியோர் இசையமைத்துள்ளனர். பாடலை சித்தார்த் பஸ்ரூர் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் பாடியுள்ளார். தமிழ் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தை கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார். KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரித்துள்ள இப்படம், ஆகஸ்ட் 26 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





