Spotlightசினிமா

காதலை தேடி அலையும் ஜி வி பிரகாஷ்!

“திரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தின் மூலம் இளம் ரசிகர்களின் பேராதரவு பெற்ற இந்த ஜோடி மீண்டும் இணைகிறது. Vision I medias சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் இந்த படத்துக்கு “காதலில் தேடி நித்யா-நந்தா” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த தலைப்பு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

” இந்த படத்தின் நாயகன் நாயகியின் பெயர் நித்யா மற்றும் நந்தா. காதலை தேடி பாரெங்கும் தேடும் ஒரு இளம் ஜோடியின் கதைதான் “காதலை தேடி நித்யா நந்தா” . வித்தியாசமான கதை களங்களை தேர்ந்து எடுக்கும் ஜி வி பிரகாஷ் இந்த படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம் , விரைவில் தொடர் அறிவிப்புகள் படத்தை பற்றி வரும்.

ரசிகர்களுக்கு ஒரு உத்திரவாதம்,இந்த படம் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும்.அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில்,லால்குடி இளையராஜா கலை அமைப்பில். ஜி வி பிரகாஷ் கதாநாயகன் , இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகள் மேற்கொண்டு உள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button