
ஆரா சினிமாஸ் தயாரிப்பு சார்பில் வீரா நடிப்பில் “அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா”, மற்றும் அதர்வா -ஹன்சிகா இணையாக நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் “100” என்ற படங்களை தயாரித்து வருகிறது.
ஜி வி பிரகாஷ் = ரைசா வில்சன் இணையாக நடிக்க, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் ஒரு horror fantsy படத்தை இன்று சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பூஜையோடு துவங்கி உள்ளனர். இப்படத்தை ஆரா சினிமாஸ் தயாரிக்கவுள்ளது.
குறும் படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குனர் கமல் பிரகாஷ் , அவர் இயக்கி உள்ள விளம்பர படங்கள் மூலமாக சில விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக் டிக், மிருதன், கொடி ஆகிய படங்களின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் வாங்கிய எஸ் வெங்கடேஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் சிறந்த பட தொகுப்பாளர் என்று பெயர் வாங்கிய சிவா இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். கமலநாதன் கலை அமைப்பில், டான் அசோக் சண்டை காட்சிகளை இயக்க, கதாநாயகன் , இசையமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகளை ஏற்கிறார் ஜி வி பிரகாஷ் குமார்.
” கதாநாயகன் ஜி வி பிரகாஷ் சாருக்கும், தயாரிப்பாளர் “ஆரா பிலிம்ஸ்” மகேஷ் கோவிந்தராஜன் சாருக்கும் , அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். “பியார் பிரேமா காதல்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறி போன ரைசா இந்த படத்தின் கதையை கேட்ட மாத்திரத்தில் உற்சாகத்தில் துள்ளி குதித்தார். திறமையான, அருமையான நடிக நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் என என் திரை பயணம் ஆசிர்வாதத்துடன் துவங்குகிறது. படத்துக்கான தோதான டைட்டிலை தேடிக் கொண்டு இருக்கிறோம் . விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம் ” என்கிறார் இயக்குநர் கமல் பிரகாஷ்.