Spotlightசினிமா

நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பங்களை திரையரங்குக்கு அழைத்த “கட்டா குஸ்தி 2”… ரசிகர்கள் கொண்டாடும் வெற்றி!

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், மோக்ஷா, பேபி ஜாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் பாகம் ரசிகர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, அதே கலகலப்பும், குடும்ப உணர்வுகளும், நகைச்சுவையும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் இணைந்த இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதாக திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பு தெரிவிக்கிறது.

வெளியான முதல் நாளிலிருந்தே படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. குறிப்பாக, குடும்ப உறவுகள், தந்தை–மகள் பாசம், கணவன்–மனைவி உறவு ஆகியவற்றை நகைச்சுவையுடன் கலந்து சொல்லியிருக்கும் விதம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது அதன் குடும்ப பொழுதுபோக்கு அம்சம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய படமாக உருவாகியிருப்பதால், நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு மக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெறும் இறுதி 30 நிமிடங்கள் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த் உள்ளிட்டோரின் நகைச்சுவை காட்சிகளும், விஷ்ணு விஷாலின் இயல்பான நடிப்பும், உணர்ச்சியுடன் கலந்த காமெடி தருணங்களும் திரையரங்குகளில் கைதட்டல்களையும், சிரிப்பலைகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

திரைப்படத்தை பார்த்து வெளியே வரும் குடும்ப ரசிகர்கள், “நீண்ட நாட்களுக்குப் பிறகு முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சிரித்து ரசித்த படம் இதுதான்” என்று தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். குழந்தைகளும் படத்தில் இடம்பெறும் நகைச்சுவை மற்றும் குடும்பக் காட்சிகளை வெகுவாக ரசித்து வருவதாக பெற்றோர்களும் கூறுகின்றனர்.

இதுகுறித்து பல்வேறு திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகையில், “சமீப காலமாக குடும்ப ரசிகர்களின் வருகை குறைந்திருந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ வெளியான பிறகு மீண்டும் குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குகளுக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. பல காட்சிகளில் ரசிகர்களின் சிரிப்பும் கைதட்டலும் அரங்கையே அதிர வைத்தது. இப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து சிரித்து மகிழக்கூடிய ஒரு முழுமையான கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக “கட்டா குஸ்தி 2” தற்போது ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் இந்த உற்சாகமான வரவேற்பு, படத்தின் வெற்றியை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், படக்குழுவினருக்கும் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button