
தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘ஜென்டில்மேன்2 ‘ .
ஏற்கனவே இதன் இசை அமைப்பாளராக பாகுபலி புகழ் மரகதமணி ( எம்.எம்.கீரவாணி ) இரண்டு கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் அறிவிக்கப்பட்டனர்.
இப்போது அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக அறிவித்துள்ளார் கே.டி.குஞ்சுமோன்.
‘ஜென்டில்மேன்’ இரண்டாம் பாகத்தில் அனுபவம் வாய்ந்த அஜயன் வின்சென்டை ஒளிப்பதிவாளராக நியமித்துள்ளார்.
இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி பிரம்மாண்ட படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பிரபலமானவர் அஜயன் வின்சன்ட். இவர் ஒளிப்பதிவு செய்த அன்னமய்யா, ருத்ரமாதேவி, டாம் 999 போன்ற படங்களின் ஒளிப்பதிவு நுட்பம் வெகு பாராட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இதே கம்பெனியில் ‘ரட்சகன்’ படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவாளர். அனுபவமிக்க அஜயன் வின்சன்ட் அதிநவீன தொழி்நுட்பங்களை கொண்டு தான் ‘ஜென்டில்மேன்2 ‘ வின் ஒளிப்பதிவு செய்ய உள்ளாராம்.