
நயன்தாரா நடிப்பில் ஜி எஸ் விக்னேஷ் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரித்திருக்கும் படம் “O2”. இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது.
கதைப்படி,
நுரையீரலில் பாதிப்பு இருப்பதால் மூச்சு விடுவதில் சிரமப்படுகிறார் நயன்தாராவின் மகன் ஆத்விக். 5 வயதே ஆன, ஆத்விக்கால் செயற்கை சுவாசம் கொண்டு தான் உயிர் வாழ முடிகிறது.
மேல் சிகிச்சைக்காக நயன்தாராவும் ஆத்விக்கும் கோயம்புத்தூரில் இருந்து கொச்சினுக்கு ட்ராவல்ஸ் பஸ் ஒன்றில் பயணம் செய்கின்றனர்.
இரவு நேரத்தில் கொச்சினை நோக்கி பஸ் சென்று கொண்டிருக்கும் வேலையில், மழையினால் மலையில் இருந்து மண் சரிவு ஏற்பட்டு பஸ் மண்ணில் புதைந்து விடுகிறது.
இதனால், பஸ்ஸிற்குள் அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர். மூச்சு விடுவதற்கே சிரமப்படும் அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கின்றனர். இறுதியாக உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் மீட்கப்பட்டார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகியாக நயன்தாரா, வழக்கம்போல் தனக்கான கேரக்டரை பெர்ஃபெக்டாக செய்து முடித்திருக்கிறார். ஒரு குழந்தையை காப்பாற்றும் தாயாக சிறப்பான கேரக்டரில் தனக்கே உரித்தான அழகு நடிப்பால் கவர்ந்திருக்கிறார் நயன்தாரா.
யூ டியூப்-ல் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமான ஆத்விக், இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
படத்திற்கு சற்று பலம் என்றால் அது கதை தான். அழகான கதையை கையில் எடுத்த இயக்குனர், அதை சொல்லும் விதத்தில் சற்று சறுக்கியிருக்கிறார்.
படத்தின் பெரிய குறை என்றால் அது திரைக்கதை தான். பேருந்தில் இருந்த இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் ஆரம்பத்தில் இருந்தே தான் தான் கதையின் வில்லன் என தனது வில்லத்தனமான பேச்சில் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
பிழைப்போமா என மரண பயத்தில் இருப்பவர்களிடம் சென்று நான் ஒரு கதை சொல்லட்டுமா என கூறுவதெல்லாம், என்ன மாதிரியான திரைக்கதை என்று நமக்கு விளங்கவில்லை. பேருந்து இங்கு தான் இருக்கிறது என்று கண்டுபிடித்த மீட்புப் படை அடுத்த நொடியே பயணிகளை காப்பாற்றி விட்டனர். அவர்களை மீட்டெடுக்கும் காட்சியில் சிறிது சுவாரஸ்யத்தை காட்டியிருந்திருக்கலாம்.
ஒளிப்பதிவிலும் இன்னும் சற்று கூடுதல் கவனம் கொண்டிருந்திருக்கலாம். விஷால் சந்திரசேகரின் இசையில் சுவாசமே சுவாசமே பாடல் மயிலிறகாக வருடுகிறது.
பின்னணி இசை ஓகே ரகம் தான்.
O2 – பலவீனம்