Spotlightசினிமா

33 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வரும் ‘ஜென்டில்மேன்’ – டிசம்பர் 11ல் 4K ரீ-ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஜென்டில்மேன்’ திரைப்படம், 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் இப்படத்தை டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

1993ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் அறிமுகமான ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார். மதுபாலா, வினீத், சுபஸ்ரீ, நம்பியார், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியான ‘சிக்கு புக்கு ரயிலே’, ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’, ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பப் பாடல்களாகத் திகழ்கின்றன.

சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு அதிரடி, காதல், நகைச்சுவை என கமர்ஷியல் அம்சங்களுடன் உருவான இப்படம், ஷங்கரின் திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக அமைந்தது.

தற்போது 4K Ultra HD காட்சித் தரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட 7.1 Surround Sound தொழில்நுட்பத்துடன் ‘ஜென்டில்மேன்’ திரைப்படம் மீண்டும் வெளியாகிறது. கிரேஸ் ஃபிலிம் மீடியா சார்பில் அனில் குமார் இப்படத்தை விநியோகம் செய்கிறார்.

டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘ஜென்டில்மேன்’, 90களின் தமிழ் சினிமா அனுபவத்தை மீண்டும் பெரிய திரையில் ரசிக்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button