Spotlightவிமர்சனங்கள்

சாம்பியன்; விமர்சனம் 3.25/5

ட சென்னையில்,  மனோஜை ரவுடி ஸ்டண்ட் சிவா கொல்கிறார்.

கணவன் மனோஜை இழந்த பிறகு தனது மகன் தான் எல்லாம் என நினைத்து அவனை ஆளாக்க நினைக்கிறார் ஜெயலெக்‌ஷ்மி. மகனை படிக்க வைக்க மிகவும் சிரமப்படுகிறார்.

மகனுக்கு ((நாயகன் விஷ்வா)) கால்பந்து விளையாட்டு என்றால் உயிர். தனது அம்மாவிற்கு தெரியாமல், பள்ளியில் மட்டும் கால்பந்து விளையாடி வருகிறார். பள்ளியில் இருக்கும் பயிற்சியாளர் விஷ்வாவின் விளையாட்டுத் திறமையைக் கண்டு, அந்த ஏரியாவில் சிறந்த கால்பந்து கோச்சாக வரும் நரேனிடம் அனுப்பி வைக்கிறார்.

ஒருவழியாக விஷ்வா தனது அம்மாவின் சம்மதத்தோடு, கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தி வரும் வேளையில், தனது தந்தையை ரவுடி ஸ்டண்ட் சிவா’தான் கொன்றார் என்ற உண்மை தெரியவருகிறது விஷ்வாவிற்கு. அதன் பிறகு விஷ்வா என்ன முடிவு எடுத்தார் என்பது படத்தின் க்ளைமாக்ஸ்…

நாயகன் விஷ்வா தமிழ் சினிமாவிற்கு புதியதோர் அறிமுகம். அறிமுக நாயகன் போல் இல்லாமல், தனது நடிப்பில் எதார்த்தை காட்டியிருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் கால்பந்து விளையாட்டில் தேர்ச்சி பெற்றவரான விஷ்வா, கால்பந்து விளையாட்டு காட்சிகளில் நம்மை ஈர்த்துவிடுகிறார்.

காதல் காட்சிகளாக இருக்கட்டும், தனது தந்தைக்காக தனது எதிர்காலம் போனாலும் பரவாயில்லை என்று துணிந்து களமிறங்க தயாராகும் காட்சியாக இருக்கட்டும் என்று அனைத்திலும் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நாயகன் விஷ்வா.
கதைக்கான நாயகனாக பளிச்சிடுகிறார் விஷ்வா.

நாயகிகள் மிர்ணாளினி மற்றும் செளமிகா பாண்டியன் இருவரும் மிளிர்ந்தாலும் வந்து செல்லும் காட்சிகள் என்பதால், நடிப்பில் பெரிதான ஈர்ப்பை பார்க்க முடியவில்லை.
கால்பந்து பயிற்சியாளராக வரும் நரேன், நடிப்பில் உச்சம் தொடுகிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் அதிரடி காட்டியிருக்கிறார்.

படத்திற்கு மிகப்பெரும் பலமாக வந்து மிரட்டுகிறார் ஸ்டண்ட் சில்வா. தனது தோற்றத்தாலும் குரலாலும் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டண்ட் சிவா.
ஹீரோவின் தாயாக நடித்த ஜெயலெக்‌ஷ்மி மகனை ஆளாக்க படும் இன்னல்களை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்.  தந்தையாக நடித்த மனோஜ் ஒரு சில காட்சிகள் வந்தாலும் பாராட்டை பெறுகிறார்.

ஆரோல் கரோலியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னனி இசை மிரட்டல் தான்…

சுஜித் சரங் ஒளிப்பதிவு கலர்புல்.

பிகில், ஜடா இரு படங்களின் காட்சிகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், சாம்பியன் தனித்துவமான முத்திரைப் பதிக்கிறான். வழக்கம்போல் சுசீந்திரன் படைப்பில் மற்றுமொரு மணிமகுட திரைப்படம் தான் இந்த சாம்பியன்.

சாம்பியன் – வரவேற்கலாம்..

Facebook Comments

Related Articles

Back to top button