Spotlightசினிமா

ஜி வி பிரகாஷ்குமார் பாடிய “ஓ பெண்ணே” மியூசிக் ஆல்பம்

பெண்ணே என்ற மியூசிக் ஆல்பத்திற்கு ஜி வி பிரகாஷ் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இப்பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் கணேஷ் சந்திரசேகரன்.

இது பற்றி கணேஷ் சந்திரசேகரன் பேசும்போது,

“ஜி.வி பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றவர்.இசைத் துறையில் பெரிய உயரங்களைத் தொட்டவர். மேலும் உயர்ந்து கொண்டிருப்பவர்.அவர் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் அவரிடம் இப்படி ஒரு யோசனையைக் கூறிப் பாடிக் கேட்ட போது அவரும் உடனே சம்மதித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

நான் சொன்னதைப் புரிந்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நான் நினைத்த மாதிரி பாடி அனுப்பியது மேலும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா காலக்கட்ட இடைவெளிகள் எங்கிருந்தாலும் அனைவரையும் இணைக்கிறது என்பதை நினைத்து வியப்பாக இருந்தது.பாடலை எழுதிய நான் அவர் பாடிய பின், அவர் குரலில் கேட்டபோது, வரிகள் எழுதிய எனக்கே அந்தக் குரல் மூலம் இன்னொரு பரிமாணம் கிடைத்ததாக உணர்ந்தேன். அவரது அந்தக் குரல் இதயத்தின் ஆழத்தில் வருடும்படி இருந்தது.

இது மனவலியை வெளிப்படுத்தும் படியான ஒரு சோகமான உணர்ச்சிகரமான பாடல்.அவரது குரல் மூலம் அந்தப் பாடலுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிட்டது”என்கிறார்.

இந்த மியூசிக் ஆல்பத்தை இயக்கி உள்ளவர் ஒத்த தாமரை பாடல் இயக்கிய டி. ஆர். பாலா. அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளார்.தீபக் துவாரகநாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆல்பத்தை சினிமா ராசா மற்றும் கேன்னி ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ளனர்.இந்த ஆல்பத்தில் நடிக்கும் நாயகன், நாயகிகள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும்”

இதுவரை இசையமைத்துள்ளவற்றில் இது ஒரு புதிய பரிமாணமாக, தனக்கு அமைந்துள்ளது என்று பெருமையுடன் கூறுகிறார் கணேஷ் சந்திரசேகரன்.

Facebook Comments

Related Articles

Back to top button