அஜித்குமார் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அஜித்குமார் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறை அவருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. விஸ்வாசம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 10-ஆம் தேதியே முடிவடைவதாக இருந்தது.
சில காட்சிகளை படமாக்குவதற்கு மேலும் 2 நாட்கள் தேவைப்பட்டது. அதனால் அஜித் தங்கியிருந்த ஓட்டல் அறையில், மேலும் 2 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கும்படி, ஓட்டல் நிர்வாகத்திடம் படத்தின் தயாரிப்பு நிர்வாகி கேட்டார்.
ஏற்கனவே செய்த ஒப்பந்தப்படி, 11-ஆம் தேதி முதல் இந்தி நடிகர் ரன்வீர் கபூருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஓட்டல் நிர்வாகி தெரிவித்தார். ”நம்மால் இன்னொரு நடிகருக்கோ அல்லது படக்குழுவினருக்கோ எந்த இடையூறும் வரக்கூடாது.” என்று கூறிய அஜித்குமார் தனது அறையை உடனே காலி செய்து விட்டார்.
”எனக்கு ஒரு சின்ன கட்டிலும், மின்விசிறியும் இருந்தா போதும்” என்று கூறிய அவர், அந்த ஓட்டலிலேயே ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு சம்மதித்தார். அவரின் எளிமையை பார்த்து படக்குழுவினரும், ஓட்டல் நிர்வாகிகளும் வியந்து போயினர்.
‘தல’ன்னு பெயரு சும்மா வைக்கல சார் நாங்க….