Spotlightசினிமா

பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் சமுதாய வலி.. 1 இலட்சம் பார்வைகளை கண்ட “மலர்”!!

ருச்சி சினிமாஸ் மற்றும் பாஸ்ட் மெஸ்ஸேஞ்சர் இணைந்து தயாரித்து இயக்குனர் ஆப்ரகாம் லிங்கன் (எ) கோடங்கி இயக்கத்தில் உருவான குறும்படம் தான் “மலர்”.

ஒரு பெண் எப்படி பாலியல் தொழிலுக்கு உள்ளானாள், அவள் கண்ட வலி என்ன.? இந்த சமுதாயத்தின் மீது அப்பெண்ணின் பார்வை என்னென்ன.? என்பதை மிகுந்த வலி கொண்டு கூறிய குறும்படம் தான் இந்த மலர்.

கதையின் நாயகியாக கயல் நடித்திருந்தார். இக்குறும்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒற்றன் துரை ஷங்கர், ஜோயல் பென்னட், சதீஷ் முத்து, ஹிதயதுல்லா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

அனீஷ் அஞ்சோ இக்குறும்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஒரு வாழ்வியலை கண்முன்னே நிறுத்தியதற்காக பலரும் இக்குறும்படத்தை பாராட்டியிருந்தனர்.

இதுவரை சுமார் 1 இலட்சம் பார்வைகளை இக்குறும்படம் அடைந்திருப்பது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close
Close