SpotlightUncategorizedவிமர்சனங்கள்

தோழர் வெங்கடேசன்; விமர்சனம் 3.75/5

நாயகன் அரிசங்கர் (வெங்கடேசன்), தனது வீட்டிலேயே சோடா கம்பெனி வைத்து, கடைகளுக்குச் சென்று சோடா விற்று வாழ்க்கை நடத்தி வருபவர். இட்லி வியாபாரம் செய்து வருபவரின் மகளாக வருகிறார் நாயகி மோனிகா.

நாயகி மோனிகாவின் தாய் திடீரென இறந்திவிட, அனாதையாக நின்ற மோனாகாவிடம் சில ஆண்கள் காம இச்சை தொல்லை கொடுக்க, தாங்கி கொள்ளாத மோனிகா தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.

அவரை, காப்பாற்றுகிறார் நாயகன் அரிசங்கர். ”தன்னை எப்போது திருமணம் செய்து கொள்ள உனக்கு விருப்பமோ, அப்போது சொல் திருமணம் செய்து கொள்கிறேன். அதுவரை என் வீட்டிலேயே தங்கிக் கொள்’ என்று நாயகன் அரிசங்கர் நாயகியிடம் கூறி விடுகிறார்.

இருவரும் ஒரே வீட்டிலேயே இருக்க, அரிசங்கரின் சோடா வியாபாரத்திற்கு அவ்வப்போது உதவுகிறார் நாயகி மோனிகா.

திடீரென ஒருநாள், அரசுப் பேருந்து அரிசங்கரின் மீது எதிர்பாராத விதமாக மோதிவிட, தனது இரு கைகளையும் அந்த விபத்தில் இழந்துவிடுகிறார்.

செய்வதறியாத நிற்கும் அரிசங்கருக்கு, உறுதுணையாக மோனிகா நிற்க… அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுகிறார் அரிசங்கர்.

வழக்கு தள்ளி தள்ளிச் சென்று மூன்று வருடத்திற்கு பிறகு தீர்ப்பு வருகிறது. அரசு அரிசங்கருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு தர வேண்டுமென்று…

தீர்ப்பின் படி, ஹரிக்கு 20 லட்சத்தை கொடுக்காமல் தொடர்ந்து காலம் கடத்தி வருகிறது. இதனால், அரசுப் பேருந்து ஒன்றை ஜப்தி செய்து அரிசங்கரிடம் கொடுக்கிறது நீதிமன்றம்.

அந்த பேருந்து வந்ததற்கு பிறகு அரிசங்கரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை….

நாயகன் அரிசங்கர் படத்தின் கதைக்கு உயிர் ஊட்டியிருக்கிறார். எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார். கைகள் இல்லாமல், அவர் தோன்றும் காட்சிகளில் ‘எப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சாரு’ என்று கேள்வி வைக்காமல் இருக்க மாட்டார்கள். காதல் காட்சிகளாக இருக்கட்டும், தனக்கு நீதி கிடைக்க அவர் படும் இன்னல்களாக இருக்கட்டும் அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கதைக்கேற்ற நாயகனாக கலக்கியிருக்கிறார் நாயகன் அரிசங்கர். சினிமாவிற்கு நாயகன் அரிசங்கர் நல்ல வரவு தான்.

படத்திற்கு அடுத்த உயிரோட்டம் என்றால் அது நாயகி மோனிகா தான். ஒரு கிராமத்து பெண்ணாக நடித்து, வளர்ந்த நாயகிகளையே ஆச்சர்யப்பட வைத்துவிட்டார். கைகள் இழந்த நாயகன் ஹரிக்கு தோளுக்கு தோளாக நிற்கும் காட்சிகளாக இருக்கட்டும் அதனால் அவர் படும் இன்னல்களாக இருக்கட்டும், அனைத்து காட்சிகளிலும் அமைதியான பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். காந்த கண்களால் அனைவரையும் கவர்கிறார் நாயகி மோனிகா. தமிழ் சினிமாவில் அவருக்கான ஒரு இடம் வந்துவிட்டது.

வக்கீலாக நடித்த அமுதேஷ்வர், நீதிமன்றத்தில் வாதாடும் போது, அரசு பேருந்து கழகத்தில் நடக்கும் சில முறைகேடுகள், தமிழக அரசின் மெத்தனங்கள், என அனைத்தையும் கூறும்போது திரையரங்குகளில் கைதட்டல் காதை பதம் பார்த்துவிடுகிறது. இயக்குனரின் கைவண்ணம்.

நாளிதழில் தினசரி நாம் கடந்து செல்லும் செய்தியை ஒரு படமாக எடுத்து, அந்த வலியை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் மகாசிவன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கனத்த இதயத்தோடு பயணிக்க வைக்கிறது இந்த ‘தோழர் வெங்கடேசன்’.

வேதா செல்வத்தின் ஒளிப்பதிவு.. ஒரு இயற்கை வாழ்வியலை கண்முன்னே நிறுத்தியிருக்கிறது.

சகிஷ்னாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னனி இசையும் கதைக்கான பயணம் தான்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் மற்றும் இயக்கம் என அனைத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் மகாசிவன்.

படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும் இயக்கிய இயக்குனருக்கும் ‘ஒரு ராயல் சல்யூட்’

தோழர் வெங்கடேசன் – கனத்த இதய காதல்..

Facebook Comments

Related Articles

Back to top button