Spotlightசினிமா

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்த “ஹனு மான்” டீம்!

திரையுலகின் திறமைமிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமா யுனிவர்ஸில் முதல் திரைப்படமாக உருவாகும் திரைப்படம் ஹனு மான். இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் இப்படம் தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சில உயர்தர VFX காட்சிகள் உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க வேண்டுமென படம்குழு தீவிர கவனம் எடுத்து உழைத்து வருகிறது. டீஸர் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டுமென்பதில் படக்குழுவினர் தெளிவாக உள்ளனர்.

இதற்கிடையில் ஹனு மான் தயாரிப்பு தரப்பிலிருந்து ரசிகர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பண்டிகை கொண்டாட்டமாக ஒரு கச்சிதமான போஸ்டரை வெளியிட்டு, படத்திற்கான விளம்பரங்களைத் தொடங்கியுள்ளனர். இந்த போஸ்டரில் தேஜா சஜ்ஜா ஒரு மாறுபட்ட பாரம்பரிய அவதாரத்தில் தோன்றுகிறார், மேலும் அவர் விநாயக சதுர்த்தி விழாவை,
ஒரு பெரிய கூட்டத்துடன் கொண்டாடுகிறார். தயாரிப்பாளர்கள் விரைவில் சில அற்புதமான அப்டேட்டுகளுடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனு மான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது.

ஹனு மான் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால், உலகம் முழுவதும் சிறப்பாக வரவேற்கப்படும் சாத்தியம் உள்ளது.

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

இந்த பிரம்மாண்டமான படைப்பின், ஒளிப்பதிவை சிவேந்திரா செய்கிறார், இதில் இளம் திறமையாளர்களான கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் ஜனவரி 12, 2024 அன்று சங்கராந்திக்கு திரைக்கு வரவுள்ளது.

நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் மற்றும் பலர்.

Facebook Comments

Related Articles

Back to top button