
நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை. இப்போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்த வருட போட்டியில் சென்னையில் நடைபெற்ற கடைசி போட்டி இது தான்.
இதனால், சென்னை வீரர்கள் ரசிகர்களுக்கு உற்சாக பிரியா விடை அளித்தனர். இந்நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றதற்காக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார்.
அதில்,
”இஞ்யார்ரா, பேரு @chennaiipl, ஊறு சென்னை, சம்பவ இடம் சேப்பாக்கம், கேப்டன் பேரு #தல, ஒத்தைக்கு ஒத்தையா வந்து @IPL ல நின்னுப்பாருங்கவே! வேற லெவல் ஆட்டம்போட தயாரா இருக்காங்க நம்ம சூப்பர் fans! நாங்களும் தயார்! Thanks for the super support, @CSKFansOfficial! #WhistlePodu #Yellove ”
என்று விஸ்வாசம் படத்தில் வரும் டயலாக்கை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Facebook Comments