
சைலேஷ் கோலானு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி, சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவு ரமேஷ், சமுத்திரக்கனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த “ஹிட் 3”.
ஹிட் 1 & 2 ஏற்கனவே ஹிட் ஆன காரணத்தால் மூன்றாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். இதன் தொடர் முழுமையும் நானியே தயாரித்திருக்கிறார்.
இந்த கதையில் நாயகனாக நானியே நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சானு ஜான் வர்கீஸ். இசையமைத்திருக்கிறார் மிக்கி ஜே மேயர்
படத்தொகுப்பு செய்திருக்கிறார் கார்த்திகா ஸ்ரீநிவாஸ்.
கதைக்குள் சென்று விடலாம்…
எக்ஸ் ஆர்மி யான சமுத்திரக்கனியின் மகன் தான் நானி. இவர் ஒரு போலீஸ் அதிகாரி (SP). எப்போதும் விறைப்பாக தனது முகத்தை வைத்துக் கொண்டு தனது பணியில் நேர்மையாக இருந்து வருகிறார் நானி. இவர் அடுத்தடுத்து இரண்டு நபர்களை தலைகீழாக தொங்கவிட்டு அவர்களை கொலை செய்து வீடியோ எடுத்துக் கொள்கிறார்.
எடுத்த வீடியோ ப்ரைவேட் இணையதளம் ஒன்றில் பதிவேற்றம் செய்கிறார். இரண்டாவது கொலை செய்யும் போது தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு போலீஸிடம் நானி சிக்கிக் கொள்கிறார். எதற்காக தான் அந்த கொலையை செய்தேன் என்று கூற ஆரம்பிக்கிறார் நானி. கதை ப்ளாஷ் பேக் செல்கிறது.
காஷ்மீரில் பணிபுரியும் போது மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரிக்கிறார் நானி. விசாரணையில், தலைகீழாக தொங்கவிடப்பட்டு அவர்களை கழுத்துறுத்து கொலை செய்து உடம்பில் சில உறுப்புகளை திருடி அதை வீடியோ எடுத்து ஒரு தடை செய்யப்பட்ட ஒரு இனையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர் சிலர்.
இந்த சம்பவம் நாட்டில் பல இடங்களில் அரங்கேறுகிறது. அந்த ப்ரைவேட் இணையதளம் யாரால் நடத்தப்படுகிறது. இதன் முளையாக செயல்படும் நபர் யார் என்றறிய இதன் வேட்டையில் இறங்குகிறார் நானி.
அந்த இணையதளத்தில் மெம்பராக ஆக வேண்டும் என்றால், இரண்டு நபர்களை கொலை செய்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் அப்லோட் செய்தால் மட்டுமே ஆக முடியும் என்ற நிபந்தனை இருப்பதால் இரண்டு அயோக்கியர்களை கொலை செய்திருப்பார் நானி.

இறுதியில், இணையதளத்தின் அட்மின் யார்.? எதற்காக இந்த கொலைகள் நடத்தப்படுகிறது .? என்பதை நானி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
படத்தின் மொத்த கதையையும் தன் தோல் மீது தாங்கிப் பிடித்துச் செல்கிறார் நானி. நானியின் லுக், மேனரிசம், ஆக்ஷன், எமோஷன்ஸ், கோபம் என பல இடங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார் நானி.
தனது ரசிகர்களுக்கு தேவையான மாஸ் காட்சிகளையும் படத்தில் வைக்கத் தவறவில்லை. உன்னி முகுந்த் நடித்து வெளியான மார்கோ என்ற படத்தினை பார்த்த பலருக்கும் இப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் நிச்சயம் நினைவிற்கு வரும்.
அப்படித்தில் எப்படியெல்லாம் ரத்தம் தெறித்ததோ, அதேபோல் இப்படத்திலும் தெறிக்க தெறிக்க ரத்தத்தை ஓட வைத்திருக்கிறார் இயக்குனர்.
2.30 மணி நேரம் படம் ஓடும் நேரம் தெரியாத அளவிற்கு மிகவும் வேகமான திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். ஆர்கன்ஸ் திருட்டு, தனிமையில் வெறுப்பில் இருக்கும் மக்களை டார்கெட் செய்து அவர்களை வைத்து மனிதர்களை கொலை செய்ய வைப்பது என ஒரு சைக்கோ கில்லர் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது.
படத்திற்கு பெரும் பலம் என்றால் அது பின்னணி இசையும் ஒளிப்பதிவும் தான். இரண்டும் படத்திற்கு மிகப்பெரும் தூணாக வந்து நிற்கிறது.,
படத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறார்கள்.
ஹிட் 1 & 2 ரசித்த ரசிகர்கள் இப்படத்தினையும் அதைவிட அதிகமாக நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஹிட் 3 – BLO(CK)OD BUSTER





