Spotlightசினிமா

நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள் வரை கொண்டாடும் “ராட்சசன்”!

 

ராம்குமார் இயக்கத்தில் டில்லி பாபு தயாரிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் “ராட்சசன்”. விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடித்துள்ள இப்படத்திற்கு நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

படம் பற்றி பிரபலங்கள் கூறிய சில வரிகள் :

நடிகர் தனுஷ் – “ராட்ச்சன்! வாவ்! மிகச்சிறப்பாக உருவாகியுள்ள ஒரு திரில்லர். புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான மேக்கிங். பலவீனமான இதயம் உடையவர்களுக்கான படம் இது இல்லை. சீட்டிம் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர். நான் படத்திற்குள் மூழ்கி விட்டேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குனர் வெங்கட் பிரபு – “ராட்சசன் தமிழ் சினிமாவில் சிறந்த சைக்கலாஜிக்கல் திரில்லர்களில் ஒன்று. சினிமா காதலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால், அமலா பால், ஜிப்ரான், ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ராட்சசனின் ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தின் தீவிரத்தை நான் விரும்பினேன்.

தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் – “மிகவும் தீவிரமான படம், படத்தின் பல எதிர்பாராத திருப்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. இந்த ஆண்டின் சிறந்த த்ரில்லர் என்று கூறலாம். விஷ்ணு விஷால் எப்போதுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். படத்தில் நடித்த அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ராம்குமார் சிறப்பாக கதையை எழுதியிருக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஜிப்ரான் இசை மிகப்பெரிய பலம்.

இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் (அதே கண்கள்) – ராட்சசன் படத்தின் ஜானருக்கு உண்மையாக இருக்கிறது. ராம்குமார் அற்புதமாக எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை கொடுத்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சவுண்ட் சின்க் சினிமா, ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் மற்றும் எடிட்டர் ஷான் லோகேஷ் ஆகியோர் அபாரமாக பணியாற்றியிருக்கிறார்கள்.

இயக்குனர் சக்திவேல் – “பிரில்லியண்ட்! 2018ல் அனைத்து மொழிகளிலும் வெளியான திரில்லர் படங்களுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறந்த த்ரில்லர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியில் இருந்து ஒரு தரமான படைப்பு. விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமாருக்கு என் பாராட்டுக்கள். இயக்குனர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு பாடம்.

இயக்குனர் கார்த்திக் ராஜு – “இயக்குனர் ராம்குமாரின் மிகவும் பலமான திரைக்கதைக்கு மீது வாவ்! விஷ்ணு விஷால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அமலா பால் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் பெரும் பணியை செய்துள்ளனர். இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக மிக தரமாக உள்ளது. ஜிப்ரான் இசை மேலும் மதிப்பை கூட்டியிருக்கிறது. இது ஒரு நிச்சயிக்கப்பய் பிளாக்பஸ்டர். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குனர் ஃபெரோஸ் – “ராட்சசன் சிறப்பாக உருவாக்கப்பட்ட, இருக்கை நுனிக்கு வர வைக்கும் ஒரு திரில்லர் படம். ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. விஷ்ணு விஷால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறார். இயக்குனர் ராம்குமாரின் முழு முயற்சியும் படத்தில் தெரிகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை அருமை.

இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா – இயக்குனர் ராம்குமார் குழுவில் இருந்து ஒரு சிறந்த திரில்லர் படம். அனைத்து துறைகளும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இது தீவிரமான திரைப்படம். திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள்.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் – “விஷ்ணு விஷால் உங்கள் கேரியரில் சிறந்த ஒரு படம். தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் ராம்குமார் ஒரு அசாதாரண சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்திருக்கிறார். அமலா பால் மற்றும் மற்ற நடிகர்களும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஜிப்ரான் பின்னணி இசை படம் முழுக்க மிரட்டுகிறது. இந்த நல்ல படத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இயக்குனர் சீனு ராமசாமி – “இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரில்லர் படம். விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.

நடிகர் கருணாகரன் – “ராட்சசனின் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. விஷ்ணு விஷால் மற்றும் ராம்! திகிலை ஏற்படுத்தும் இந்த திரில்லர் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இயக்குனர் கௌரவ் நாராயணன் – “சீட்டின் நுனிக்கு வரவைத்த இந்த அர்த்தமுள்ள சைக்கோ த்ரில்லர் படத்தை முழுமையாக ரசித்தேன். விஷ்ணு விஷால் நடிப்பும், அவரது உடல் மொழியும் நன்றாக இருக்கிறது. அமலா பால் இயற்கையான மற்றும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜிப்ரானின் இசை உச்சம். கேமரா மற்றும் எடிட்டிங் சிறப்பு. இயக்குனர் ராம்குமார் மற்றும் மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்.

ராணா டக்குபதி – “வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால்! ‘ராட்சசன்’ படத்தை பற்றி நல்ல நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன். விரைவில் படத்தை பார்க்கிறேன்.

Facebook Comments

Related Articles

Back to top button